சுனாமியால் ஏற்பட்ட தொல்லைகளுக்காக நிவாரணப் பொருட்களைப் பேணி வருவதற்கான களஞ்சியமொன்று 2005 இல் சமூக சேவைகள் அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டது. இதனை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தொடர்ச்சியாக பேணிவருவதுடன், அவசர நிலைமைகளின் போது நிவாரணம் வழங்க அவசியமான உலர் உணவுகள், நீர், புகலிடங்கள் / கூடாரங்கள், துப்பரவேற்பாட்டுச் சாதனங்கள், சுகாதார உபகரணங்கள், சமையலறை பாத்திரங்கள், படகு எஞ்சின் மற்றும் உடைகள் இங்கு களஞ்சியப்படுத்தப்படுகின்றன. இதற்கு மேலதிகமாக நீர் இறைக்கும் கருவிகள், நீர்த் தாங்கிகள் மற்றும் நீரைச் சுத்திகரிக்கும் உபகரணங்கள் போன்றவையும் களஞ்சியப்படுத்தப்பட்டு வரட்சி நிலவும் பிரதேசங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றன. தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் இந்நிவாரணப் பொருட்களை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் ஊடாகவே விநியோகிக்கின்றது. அவ்வாறு விநியோகிக்கப்படும் பொருட்களாவன்.
- உணவு
- நீர்
- துப்பரவேற்பாட்டுச் சாதனங்கள்
- சுகாதார உபகரணங்கள்
- பிற பொருட்கள்
அவசரகால நிவாரணப் பொருட்களின் விநியோகப் பட்டியல்கள்