Sinhala (Sri Lanka)English (United Kingdom)
முகப்பு திட்டப்பணி இயக்கத்திலுள்ள கருத்திட்டங்கள்

இயக்கத்திலுள்ள கருத்திட்டங்கள்

வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மண்சரிவு அதிக ஆபத்து காரணமாக இடம்பெயரத்தப்பட்ட குடும்பங்களின் மீள்குடியேற்றம்.

  • நிலச்சரிவினால் பாதிக்கப்படும் குடும்பங்களை மீள்குடியேற்றம்.
  • NDRSC, மீள்குடியேற்றத் திட்டத்திற்கு (உரிமையாளரால் இயக்கப்படும் கட்டுமானம்/முன்-வார்ப்பு வீடு கட்டுமானம்) நிதியுதவி மற்றும் ஒருங்கிணைக்கிறது.
  • NBRO ஆனது 14 மாவட்டங்களில் உள்ள 121 பிரதேச செயலகங்களில் வசிக்கும் 11,517 பயனாளிகளின் பட்டியலை அடையாளம் கண்டுள்ளது.
  • அமைச்சரவை தீர்மானங்களின்படி மீள்குடியேற்றம் செய்வதற்கான தெரிவுகள்:

தெரிவு 01:

அரசாங்கத்தினால் ஒரு காணி (தோராயமாக 10 பேர்ச்) வழங்கப்பட்டும், பயனாளிகளுக்கு ரூ. 1.2 Mn வீட்டை நிர்மாணிப்பதற்காக, நான்கு (04) தவணைகளின் முடிக்கப்பட்ட கட்டங்களின் அடிப்படையில் வழங்கப்படும்

தெரிவு 02:

அரச காணி கிடைக்காத பட்சத்தில், வீடொன்றை நிர்மாணிப்பதற்காக வழங்கப்பட்ட 1.2 மில்லியனுக்கு மேலதிகமாக பொருத்தமான காணியை கொள்வனவு செய்வதற்காக மேலதிகமாக 0.4 மில்லியன் வழங்கப்படும்.

தெரிவு 03:

வீடுடன் கூடிய பொருத்தமான காணியை கொள்வனவு செய்வதற்கு 1.6 மில்லியன் ரூபா வழங்கப்படுகிறது.

  • கொடுப்பனவு தவணை முறையில் வழங்கப்படுகிறது.
  • NBRO இன் ஒப்புதல் மற்றும் பரிந்துரை தேவை.
  • 2016-2017 ஆம் ஆண்டில் NBRO ஆல் அடையாளம் காணப்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் மண்சரிவு அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பாதுகாப்பு மையத்தின் வசதிகளை மேம்படுத்துதல்

குறிக்கோள்:

  • பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது மற்றும் பேரிடர் காலங்களில் பாதுகாப்பு மையங்களில் பாதுகாப்பான மற்றும் வசதியான சூழலை உருவாக்குதல்.

அடங்கும் முன்னேற்றங்கள் ;

  • புதிய சுகாதார வசதிகளை உருவாக்குதல் / ஏற்கனவே உள்ள சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் (கழிப்பறைகள் மற்றும் குளியலறை வசதிகள்).
  • பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தனித்தனியாக வசதிகளை அமைத்தல்.
  • தற்போதுள்ள கட்டிடங்கள் மற்றும் கூரைகளை பழுதுபார்த்தல் / புதுப்பித்தல்.
  • தண்ணீர் மற்றும் மின்சாரம் வழங்குதல்.

அனர்த்த சேவைகளுக்கான தற்செயல் மரபை செயல்படுத்துதல்.

  • தற்செயல் திட்டம் 2017 ஆம் ஆண்டில் 'நிவாரண மற்றும் மீளாயத்தநிலைத் திட்டம்' (தற்செயல் திட்டம்) என அறிமுகப்படுத்தப்பட்டது.
  • தற்செயல் திட்டத்தின் நோக்கமானது, பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்சியை திறமையான மற்றும் பயனுள்ள வகையில் வழங்குவதை எளிதாக்குவதாகும்.
  • அனைத்து 332 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன
  • தற்செயல் திட்டம் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும்
  • http://contingency-planning.ndrsc.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக இதனை அணுகலாம்

தீவிர வறண்ட வானிலை நிலைகளின் போது குடிநீர் விநியோகத்தை எளிதாக்குதல் மற்றும் கண்காணித்தல்.

  • பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடிநீரை விநியோகிக்க மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு நிதி வழங்கல்.
  • வாகன சாரதிகள் மற்றும் உதவியாளர்களுக்கு  தண்ணீர், எரிபொருள் மற்றும் பிற செலவுகளுக்கான கொடுப்பனவுகள்.
  • லொரி பவுசர்கள், டிராக்டர் பவுசர்கள் மற்றும் தண்ணீர் தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
  • நீர் வளங்களின் கட்டுமானம் அல்லது மேம்பாட்டிற்கான வழங்கள்கள்.

 

Resettlement of families displaced due to Floods, Landslides and Landslide high - risk

Last Updated on Monday, 15 February 2021 06:36  

புதிய செய்திகள்

பூனாகலை கபரகல மண்சரிவு -19-03-2023 பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பூனாகலை கபரகல பிரிவில் நேற்றிரவு (மார்ச் 19, 2023) ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 70 குடும்பங்... மேலும் வாசிக்க
Miss.B.Sheeba represented the 9th international conference on flood management in Japan "River Basin Disaster Resilience and Sustainability by all integrated flood Management in the post-Covid 19 Era" Miss.B.Sheeba represented the 9th int... மேலும் வாசிக்க